Medicine
  • Home
  • சித்த மருத்துவம்
  • கீரை பயன்கள்
  • Home
  • சித்த மருத்துவம்
  • கீரை பயன்கள்

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள் :-

முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

* முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டன்கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

* இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

* துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

* முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

* இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டன்ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

* இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

* வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும்.

Next Storyபயன் உள்ள தகவல்

Related Articles

  • பொன்னாங்கன்னி2
    பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Recent Posts

  • உடல் எடையை குறைக்க நாம். பின்பற்றக் கூடியவை:
  • வயிற்று பூச்சி வெளியேற – பெரியவர்கள், குழந்தைகளுக்கு
  • பீட்ரூட்டை எப்படி பயன்படுத்தலாம்.! இப்படி சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் தரும்
  • நுரையீரல் சளி, ஆஸ்துமா போன்றவற்றிக்கு உடனடி தீர்வு
  • வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Categories

  • General info
  • Uncategorized
  • இய‌ற்கை வைத்தியம்
  • கீரை பயன்கள்
  • சித்த மருத்துவம்
  • Home
  • சித்த மருத்துவம்
  • கீரை பயன்கள்