Medicine
  • Home
  • சித்த மருத்துவம்
  • கீரை பயன்கள்
  • Home
  • சித்த மருத்துவம்
  • கீரை பயன்கள்

உடல் எடையை குறைக்க நாம். பின்பற்றக் கூடியவை:

a-colorful-selection-of-fruits-and-vegetables

கடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிற்றை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள், பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். தாகம், பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர்!

இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 தம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகிறது!


இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகி விடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை சீராக வைத்திருக்க முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து, உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.


உடல் எடை சீராக இருக்க, தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும்! இன்று பெரும் பிரச்சினையாக உடல்ரீதியாக மனரீதியாக பாதிப்படை செய்வது உடல் எடை அதிகரிப்பு தான் காரணம் அதிகப்படியான கலோரி உள்ள உணவுகளை தினமும் உட்கொள்வதால் அதற்கு ஏற்றார்போல் உடற்பயிற்சி செய்து கலோரி எரிக்கப்படாததால் பெண்களுக்குஉடம்பில் கால் தொடைப் பகுதியிலும் இடுப்புப் பகுதியிலும் பின்பு மற்ற பகுதியிலும் தேவையற்ற கொழுப்பு தங்கிவிடுகிறது ஆண்களுக்கு மட்டும் பெரும்பாலும் வயிறு பகுதியிலேயே தங்கி தொப்பை விழுகிறது இதனால் நடப்பதில் சிரமம் மூச்சுவிடுவதில் சிரமம் விகாரமான தோற்றம் ஏற்படுகிறதுஅழகு குறைந்து விட்டதோ என்ற தாழ்வு மனப்பான்மை இதையெல்லாம் நீக்கக்கூடிய சக்திவாய்ந்த ஒற்றை மூலிகை தான் நத்தை சூரி நத்தை சூரி என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியுங்களா மழைக்காலங்களில் தோளில் சங்கு போன்ற வடிவத்தில் இரண்டு கொம்பு வைத்துக்கொண்டு நத்தை ஊர்ந்து செல்வதை பார்த்திருப்பீர்கள் அந்த நத்தை மேல் இந்த மூலிகை சாறு விட்டோம் என்றால் சதை வேறு ஓடு வேராக பிரிந்துவிடும் அதனாலதான் நத்தைசூரி என்று பெயர் வரக் காரணம் (சூரி என்றால் கொல்லுதல் என்று பொருள் படும்) நத்தை சூரி விதையை தினம்தோறும்காபி டீ போல் பயன்படுத்தி வந்தாலே போதும் உடல் எடை குறைவதை கண்கூடாகக் பார்க்கலாம் அல்லது நத்தை சூரி விதை 100 கிராம். ஆவாரம் பூ 25 கிராம் சுக்கு 25 கிராம் கொத்துமல்லி விதை 25 கிராம் கேழ்வரகு 25 கிராம் மருதம்பட்டை 5 கிராம் எலுமிச்சை இலை இரண்டு கிராம் இவைகளை தக்க அனுபவம் உள்ளவர்களிடம் சுத்தி செய்து சூரணமாக தயார் செய்து வைத்துக் கொண்டு காலை இரவு ஒரு ஸ்பூன் உணவுக்கு முன்பாக 5 கிராம் எடுத்து கசாயமாக அல்லது டீ போடுவது போல் தயார் செய்து அதனுடன் கெமிக்கல் கலக்காத இயற்கை நாட்டு சர்க்கரை அல்லது ஒரிஜினல் பனங்கற்கண்டு சேர்த்து காலை இரவு உணவுக்கு முன்பாக சாப்பிட மிக விரைவாக உடம்பில் தேங்கி உள்ள கெட்ட கொழுப்பு எல்லாம் கரைத்து வெளியேற்றி கெட்ட கொழுப்பு நீங்கி உடலுக்கு அழகைத் தந்து உடம்பு இறுகும் சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் யானையைப் போன்ற பலத்தைக் கொடுக்கும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் இதை தாங்களே தயார் செய்து கொள்ளாமல் முறைப்படி தங்கள் அருகில் உள்ள அனுபவம் வாய்ந்த பட்டதாரி மருத்துவர்களிடமோ பாரம்பரிய மருத்துவர்களிடமோ எடுத்துக்கூறி இந்த முறையில் தயார் செய்து சாப்பிடுங்கள் உண்மையை உரக்கச் சொன்னேன் உணர்ந்திடுங்கள் ஏனென்றால் எல்லா பெருநகரங்களிலும் உடல் எடை குறைப்பதற்காக பல்வேறு விளம்பரங்களை செய்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய டின்னில் அடைக்கப்பட்ட ஏதோ மருந்துகளைக் கொடுத்து மிகப் பெரிய வியாபாரம் நடந்து கொண்டு இருப்பது வேதனை அளிக்கிறது பல ஆயிரங்கள் செலவு செய்கிறார்கள் அது எல்லாம் ஏமாற்றுவேலை பக்க விளைவுகள் உள்ளது நம் நாட்டு மூலிகையான நத்தைச் சூரியில் எந்தப் பக்க விளைவும் கிடையாது. இதே நத்தைச்சூரி சூரணத்தை கொண்டு சீதபேதி தீராத பெருங்கழிச்சல் வயிற்று வலி இவைகளுக்கும் கொடுக்க தீரும் நத்தைச் சூரி வேரை எடுத்து வந்து சுக்கு ஏலக்காய் கலந்து நன்னாரி சர்பத் தயார் செய்வது போல் தயார் செய்து அதனுடன் பாதாம் பிசின் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு சிறந்த பலத்தைக் கொடுக்கும்.

Previous Storyவயிற்று பூச்சி வெளியேற – பெரியவர்கள், குழந்தைகளுக்கு

Related Articles

  • maxresdefault11
    பீட்ரூட்டை எப்படி பயன்படுத்தலாம்.! இப்படி சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் தரும்
  • image-20151026-18435-11ee0q4
    பயன் உள்ள தகவல்

Recent Posts

  • உடல் எடையை குறைக்க நாம். பின்பற்றக் கூடியவை:
  • வயிற்று பூச்சி வெளியேற – பெரியவர்கள், குழந்தைகளுக்கு
  • பீட்ரூட்டை எப்படி பயன்படுத்தலாம்.! இப்படி சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் தரும்
  • நுரையீரல் சளி, ஆஸ்துமா போன்றவற்றிக்கு உடனடி தீர்வு
  • வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Categories

  • General info
  • Uncategorized
  • இய‌ற்கை வைத்தியம்
  • கீரை பயன்கள்
  • சித்த மருத்துவம்
  • Home
  • சித்த மருத்துவம்
  • கீரை பயன்கள்